மனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்
Tuesday, October 1, 2019
கவிதை மின்னல்கள்
ஆணிகள்
பள்ளிகளில்
தேவையில்லையென
பிடுங்கியெறியப்பட்ட ஆணிகள்
பின்னாளில்
எங்கோ கிடந்து துருவேறி
யார் காலையோ
பதம் பார்க்கக்
காத்திருக்கின்றன
ராட்சசி படம்
இன்று, ராட்சசி பட இயக்குநர் கௌதம்ராஜ், வசனம் எழுதிய பாரதிதம்பி ஆகிய இருவரையும் சந்தித்தேன். கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மலேசியா வந்துள்ளனர். மக்கள் ஓசை நாளிதழ் அலுவலகம் சென்று வந்தோம். ராட்சசியின் வெற்றிக் கதையையும் பல சுவைத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். கௌதம்ராஜ்க்கு இது முதல் படம். ராட்சசிக்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருவதாக இருவரும் குறிப்பிட்டனர்.
பத்தாண்டு காலம் ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த பாரதி தம்பி சிறந்த கட்டுரையாளர். 'குடி குடியைக் கெடுக்கும்', 'கற்கக் கசடற விற்க அதற்குத் தக', 'தவிக்குதே..தவிக்குதே', 'எதிர்க்குரல்' ஆகிய நான்கு நூல்களை எழுதியுள்ளார். பிரிக்ஃபீல்ஸ் சென்று வந்தோம். சமூக அக்கறை கொண்ட படைப்பைத் தந்த இருவரோடு கழிந்த இன்றைய நாள்.. இனிய நாள்.
Subscribe to:
Posts (Atom)