நம் குரல்

Tuesday, August 3, 2010

பழகு


ஆயுள் நீளும் ரகசியம்
சிரிக்கப் பழகு

பிடித்துத் தள்ளும் தோல்வி
செரிக்கப் பழகு

உலுக்கி எடுக்கும் துரோகம்
சகிக்கப் பழகு

இடறச் செய்யும் தடைகள்
உடைக்கப் பழகு

எங்கும் மாறுவேடப் புருசர்கள்
நடிக்கப் பழகு

கோபம் தூண்டும் சொற்கள்
அடக்கப் பழகு

அன்பைத் தேடும் இதயம்
அணைக்கப் பழகு

உன்னைப் பிணிக்கும் புன்மை
புதைக்கப் பழகு

எங்கும் முளைக்கும் சவால்
போராடப் பழகு

நீளும் ஏழைக் கைகள்
கொடுக்கப் பழகு

வழியில் தடுக்கும் எருமை
கடக்கப் பழகு

சுற்றிச் சந்தை இரைச்சல்
தனிமைக்குப் பழகு

உன்னில் விழிக்கும் மிருகம்
அடக்கப் பழகு

அவிழும் இயற்கை அழகு
ரசிக்கப் பழகு

இனத்தின் ஈனச் செயல்கள்
முடிக்கப் பழகு

காடு மண்டும் தளைகள்
அறுக்கப் பழகு

காதில் ஈயச் சொற்கள்
பொறுக்கப் பழகு

பொதுமையில் மறையும் தமிழன்
தமிழனாகப் பழகு

மனிதன் திறந்த புத்தகம்
படிக்கப் பழகு

உன்னை மிதிக்கக் கால்கள்
பொங்கப் பழகு

No comments:

Post a Comment