நம் குரல்

Monday, October 11, 2010

சிறுகதைக் கருத்தரங்கும் பிரபஞ்சனின் வருகையும்..லேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், செர்டாங் இலக்கிய வட்டத்தின் ஆதரவோடு சிறுகதைக் கருத்தரங்கினை 9, 10 அக்டோபர் ஆகிய இரு தினங்களின் கோலாலம்பூர் மிடா தங்கும் விடுதியில் நடத்தியது. 130 இலக்கிய ஆர்வலர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2009ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு, பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு வெளியீடு, திரு. முத்து நெடுமாறனின் ‘இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு: புதிய செய்திகள்’ உரை, சிறுகதைப் பட்டறை - அதன் மீதான கருத்துரை, பங்கேற்பாளர்களின் அனுபவப் பகிர்வு எனப் பல அங்கங்களை இந்த இருநாள் நிகழ்வு கொண்டிருந்தது.

பிரபஞ்சனின் பேச்சு அனைவரையும் கவர்ந்த அங்கம். சிறுகதை குறித்துப் பல கருத்துகளை நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.No comments:

Post a Comment