நம் குரல்

Sunday, June 15, 2014

ஒரு கனவு நனவாகிய தருணம்...


என் அன்பு மகள்  கனிமொழியாள் நேற்று (14.6.2014)  மருத்துவத்துறையில் பட்டம் பெற்றாள். மணிப்பால் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வு மலாக்கா நகரில் நடைபெற்றது.  இந்த இனிய நன்னாளில் உறவினர்களும் உடன் வந்து மகிழ்வைப் பகிர்ந்துகொண்டனர். 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்' நிலையை நானும் என் அன்பு மனைவியும் அடைந்தோம். கல்வியில் தங்களின் இலக்கை எட்டிப் பிடிக்கும் பிள்ளைகளைக் காண்பதைவிட பெற்றோருக்கு வேறு என்ன பெரும் மகிழ்ச்சி இருக்க முடியும்?
3 comments:

 1. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பு வாழ்த்துக்கு நன்றி!

   Delete
 2. வணக்கம் !
  வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகியிருந்த தங்களின் தளத்தைக் கண்டு
  முதன்முறையாக இங்கே வருகை தந்துள்ளேன் மகிழ்ச்சியான இத் தருணத்தில்
  தங்களின் அருமைப் புதல்விக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும்
  வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .சரஸ்வதி கடாட்சம் நிறைந்த பதுமையைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தங்களின் எண்ணம் போல் மங்கை இவளின் வாழ்வும் சிறக்க இறைவன் மென்மேலும் நல்லாசிகளை அள்ளி வழங்கட்டும் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

  ReplyDelete