புக்கிட் ஜாலிலில் Tsutaya Books
ஜப்பானின்
மிகப்பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனம், ஜூலை ஏழாம் தேதி கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் தனது கிளையைத் திறக்கிறது. 31,000 சதுர அடியில் 264 000 ஜப்பான், ஆங்கிலம், சீனம், மலாய்
ஆகிய மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.
அங்கு
உள்ள கடையில் சுவைபானம் அருந்திக்கொண்டே
புத்தகங்களைக் கண்ணோட்டமிடும் வாய்ப்பு உண்டு.
இனி
மின்னூல்தான். அச்சில் வரும் நூல்கள் காணாமல் போய்விடும் என்று பல கதைகளைக்
கேட்டோம்.
2030க்குள் மலேசியாவில்
இந்நிறுவனம் 55 கிளைகளைத் திறக்கத்
திட்டமிட்டுள்ளது.
எல்லாம்
சரி. அங்குத் தமிழ் நூல்கள் கிடைக்காதா என்று நாம் கேட்கலாம். மலேசியத் தமிழ்
புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் என்ற
ஒன்றை அமைத்துக் கோரிக்கை வைத்தால் அதற்கு வாய்ப்பு அமையலாம்.
No comments:
Post a Comment