இதுபோல் வாய்க்குமா நாய்களுக்கு வாய்ப்பு?
பேச் என்ற பத்து வயது நாய், கணையம் பாதிக்கப்பட்டுக் கடந்த வியாழன் காலமானது.
இரு முன்னம் கால்களும் அடிபட்டு மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பேச், நாய் மீட்போர் இயக்கத்தால் தத்து எடுக்கப்பட்டுப் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு 2 1/3 பகுதிக் கால்களுடன் மீண்டு வந்தது.
வாடிய நாய்களைக் கண்டபோதெல்லாம் வாடும் நல் உள்ளங்களின் அன்பினால் 10 வருடம் நிறைவாக வாழ்ந்து முடித்துள்ளது பேச். அதனோடு கழித்த இனிய நினைவுகளை இன்று நாளிதழில் சிலர் பகிர்ந்துள்ளனர்.
அதன் நல்லடக்க சடங்கிற்கான அனைத்துச் செலவுகளையும் நிர்வாணா ஆசியா குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாயை நாயாகப் பார்க்காமல் சக உயிரியாகப் பார்க்கும் உயர்ந்த உள்ளங்களைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment