உயிர்
உருக்கும் அந்தக் குரல்
காற்றுவெளியில்
கவனம் ஈர்க்க
எங்கும்
நீக்கமற நிறைகிறது
இடைவிடாது
ஒலித்தும்
யார் காதுக்கும்
கேட்பதில்லை
அவர்களின்
குரல்
தோல் தடித்த
காதுகள்
சில
ஒலிகளை மட்டும்
எப்பொழுதும்
உள்வாங்குவதில்லை
அவர்கள்
பாலைவனத்தில்
சுடுமணல்
கடந்து
பயணிக்கிறார்கள்
அகதிமுகாம்களில்
நீண்ட வரிசையில்
நிற்கிறார்கள்
வாழுமிடங்களை நெருங்கிவரும்
இயந்திரங்களைப்
பார்க்கிறார்கள்
சாலையோரங்களில்
கடந்துபோகும்
மனிதர்களிடம்
கையேந்துகிறார்கள்
போரில் சிதலமான
வீடுகள் முன்
செய்வதறியாது
கலங்குகிறார்கள்
அவர்கள்
குறைந்த
வருமானத்தில்
வாழ்வதறியாது
தவிக்கிறார்கள்
தீவிரவாதத்
தாக்குதலில்
சிதைந்த உடல்
உறுப்புகளோடு
நடமாடுகிறார்கள்
பேச்சுரிமைகள்
மறுக்கப்படுவதால்
தமக்குள்ளாக
முணகுகிறார்கள்
அவர்கள்
மதத்தின் கைகள்
தங்கள் கழுத்தை
இறுக்குவதைப்
பொறுக்காமல்
புலம்புகிறார்கள்
அதிகார
பீடங்கள் தங்களைக்
கீழே தள்ளி
எழுப்பப்படுவதால்
துடிக்கிறார்கள்
நம் முகங்களின்
சாயல்களில்
அவர்கள்
முகங்கள் இருந்தும்
நாம் அவர்களை
எளிதாய்க்
கடந்து
போகிறோம்
காதில் விழும்
ஏதேதோ ஒலிகளை
இரசித்துத் தலையசைத்தவாறு
வணக்கம்
ReplyDeleteஐயா
உண்மைதன் யாவும் மனிதனுக்குத்தான் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். உடனே கருத்துக்கூறி என்னை உற்சாகமூட்டுகிறீர்கள்.
Deleteமிக்க நன்றி
அன்புடன்
ந.பச்சைபாலன்