நம் குரல்

Monday, March 28, 2011

யார் ஆண்டாலும்


தேர்தல் பரபரப்பின்
சாலைப் புழுதியில் சிக்காது
தெருவோர மண்ணில் முடங்கி
கால்நீட்டி ஆகாயம் வெறித்து
பெருமூச்சுவிட்ட
கிழவனின் நெஞ்சக் குளத்தில்
ஆசைக் குமிழிகள்
உருவாகி உருவாகி உடைந்தன
யார் வருவார் ஆட்சிக்கு?
எவர் தருவார்
அதிக இலவசங்கள்?
ஆடு வாங்க லோன் கிடைக்குமா?
அடுப்புக்குக் கேஸ் கிடைக்குமா?
மிக்ஸியும் கிராண்டரும்
சொன்னபடி வீடுவருமா?
போனமுறை சொன்ன டிவி
இனியாகினும் கண்ணில் வருமா?


3 comments:

  1. பாலா,

    நம்பிக்கைதான் வாழ்க்கை

    வாழ்க்கையே இல்லாதபோது
    நம்பிக்கையை எங்கே தேடுவது?

    சங்க காலத்தில்
    வீரத்தையும் காதலையும்
    இரு கண்களாகக் கொண்ட
    தமிழினம்

    சேர சோழ பாண்டியர் என
    வரலாற்றைப்
    புரட்டிப் போட்ட தமிழினம்..

    வள்ளுவன், கம்பன், பாரதி, பாரதிதாசன்,கண்ணதாசன் என
    உலகுக்குப் புது வழி அமைத்த தமிழினம்..

    இன்றோ..
    சினிமா காரர்களின் காலடியில்
    வீழ்ந்து கிடக்கிறது.

    பேசாவிட்டால் தமிழன் செத்திடுவான்
    ஒரு படத்தின் வசனம் இது..
    ஆனால்
    பேசி.. பேசியே
    செத்துக் கொண்டிருக்கிறது
    தமிழனின் மரபு

    ReplyDelete
  2. யார் ஆண்டாலும் மக்களுக்கு என்ன
    பயன்?
    ஆட்டு மந்தைகளாய்ப் பின் தொடர்வதுதானே
    நம் தாரக மந்திரமாக இருக்கிறது.
    விடியல் தூரத்திலா? ஊகும்.. அறவே இல்லை.

    ReplyDelete
  3. வித்தியாசமான படங்கள் கவிதைக்கான சிந்தனையை
    என்னுள் எழுப்பி விடுகின்றன. அந்த வரிசையில் இந்தப்
    படமும் ஒன்று. தமிழகத்திற்கு மட்டுமல்ல. மலேசியாவிலும்
    நம்மவர் சூழலுக்கு இது பொருந்திப்போவது கவனிக்கத்தக்கது.

    ReplyDelete