இறப்பு வீடுகளில் மயான அமைதி
பாலைவெளியில் தனித்து ஒதுங்கிய பறவையாய்
தானாக வந்தமர்கிறது
சொற்களைக் குறைவாய்ப் பேசியவாறு
நினைவலைகளை மீட்டியவாறு உரக்கப் பேசுகிறது
ஒவ்வொரு மனமும்
உடைந்து மறையும் நீர்க்குமிழியாய்
கத்தல்களும் கதறல்களும் அவ்வப்போது
பொங்கியெழுந்து கரைகின்றன
வெட்டவெளியில் விழித்திருக்கும் நிலா ஒளியாய்
உறங்கிப்போனவரருகே
ஒளி சிந்திக்கொண்டிருக்கும் விளக்கு
சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள்
சிலர் அழுது ஓய்ந்துவிட்டார்கள்
சிலர் அழுபவர்களைப் பார்த்து
அழுவதெப்படி எனத் திகைத்து யோசிக்கிறார்கள்
இறப்பு வீட்டுக்குரிய ஏதோ மணம்
காற்றில் கலந்து
நாசிகளில் வந்து சேர்கிறது
சிறார்கள் விளையாட வாய்ப்பிருக்குமா
எனக் காத்திருக்கிறார்கள்
நன்கொடை திரட்டும் புத்தகத்தின் பக்கங்கள்
காற்றில் படபடக்கின்றன
பசித்த வயிறுகளை எதிர்பார்த்து
உணவு வகைகள் ஒரு மூலையில்
புதிதாய்
வாங்கிய சீட்டுக்கட்டுகளை
ஒரு
கூட்டம் கலைத்துப் போடுகிறது
பெரிய
எண்ணுக்கும் சிறிய எண்ணுக்கும்
பந்தயம்
கட்டுகிறது
நச்சரவமாய்
மனங்களில் நுழைந்து
அவர்களை
வளைக்கத் தொடங்குகிறது
தீர்ந்து
போகாத ஆசை
ஐந்தில்
தொடங்கி ஐயாயிரம் வெள்ளிவரை
விடிய
விடிய வேட்டை தொடர்கிறது
போதையில்
நனைந்த குரல்கள்
கொச்சை
வார்த்தைகளில் கைகலக்கின்றன
சீட்டுக்கட்டுகளோடு
காணாமல் போகும் கூட்டம்
ஆவலாய்க்
காத்திருக்கிறது
அடுத்த
இறப்புச் செய்தியை எதிர்பார்த்து
வணக்கம்
ReplyDeleteஐயா
உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-