மனத்தில் ஊறியூறித் ததும்புகின்றன
எண்ணிறந்த கேள்விகள்பதில்களுக்கான வழித்தடங்கள்
பனிகொட்டும் காலைப்பொழுதாய்
மங்கலாகத் தெரிந்தாலும்
மனத்தில் சிடுக்குகளில்
முளைத்துகொண்டே இருக்கின்றன
கேள்விகள்... கேள்விகள்...
நாங்கள் அள்ளியள்ளிச் சேர்த்த கேள்விகள்
அதிகார வர்க்கத்தின் வாசல்களில்
நீதிமன்ற படிக்கட்டுகளில்
தடுப்புமுகாம்களின் வேலியோரங்களில்
காவல்நிலைய அறைகளில்
நாடாளுமன்ற குளிர்சாதன இருக்கைகளில்
கொட்டிக்கிடக்கின்றன
சுடச்சுடச் தந்த கேள்விகள்
நவுத்துப்போய் கேட்பாரற்று
வழியெங்கும் இறைந்துகிடக்கின்றன
கேள்விகளால் சபிக்கப்பட்ட
எங்களின் முகங்களுக்கு முன்னால்
எப்பொழுதும் தொங்குகின்றன
நிறைய கேள்விக்குறிகள்
No comments:
Post a Comment