நம் குரல்

Monday, February 15, 2010

குறுங்கவிதைகள்



1
கவிதைச் சண்டையில்
தொடங்கினோம்
இப்பொழுது
நம் கைகளில்
கற்கள்

2
உடுத்திக்கொண்டிருந்த
ஒவ்வொன்றையும்
அவிழ்க்கத் தொடங்கினேன்
கலைந்து கிடந்தன
புகழ்நனைத்த சொற்களும்
அர்த்தமில்லாப் பயமும்
பிம்பம் பற்றிய அலட்டலும்
இன்ன பிறவும்

3
எப்போதாவது நீ
இரையாய் விட்டெறியும்
சில அன்புமொழிக்காக..
விட்டுவிடுபட நினைத்தும்
மீண்டும் மீண்டும் வந்து
மண்டியிடுகிறேன்
உன் மனக்கூண்டில்

4
ரகசியங்கள் நிரம்பி வழியும்
குளியலறையின் தனிமையில்
எண்ணச் சிதறல்கள்
பொங்கிப் புறப்பட்டுத்
தலைதொடங்கி கீழ்நோக்கி
உணர்வு வளைவுகளில் தவிழ்ந்து
உணர்ச்சி நரம்புகளை நனைத்துப் பரவி
சொற்களாய் நீர்க்கோலமிட்டு
தரையெங்கும் கொட்டிக்கிடந்து
இருகைகளால் அள்ளி ஆராதிக்க
கண்சிமிட்டி இழுக்கிறது
அழகிய கவிதையாய்..

1 comment:

  1. பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன் !
    நன்றி !

    ReplyDelete