நம் குரல்

Monday, February 15, 2010

முடிவற்ற உரையாடல்கள்...


உவப்பத் தலைக்கூடிக் கைகுலுக்கிக்
குசலம் விசாரித்து
நகைச்சுவைகளில் நனைந்து
எதிர்காலக் கனவுகளில் மூழ்கி
கனமான அறிக்கைகளை அலசி
கருத்துகளை முன் வைத்து
அவையின் கவனம் ஈர்க்க
உரத்தக் குரல்களில் கத்திக்
கோபாவேசமாய்ப் பொங்கி வழிந்து
தீர்மானங்கள் நிறைவேற்றிக்
கைதட்டலால் அதிரவைத்துக்
கடமை முடிந்ததாய்க் கோப்புகளை மூடி
உள்ளப் பிரிதலோடு
நீங்கள் புறப்பட்டுப் போனபின்பு
மிகப் பிரமாண்டமான அந்த அரங்கத்தின்
சுவர்களில் காதுவைத்துக் கேட்கையில்
எதிரொலித்துக்கொண்டே இருந்தன
உணர்ச்சிமயமான
உங்களின் பேச்சொலிகள்

No comments:

Post a Comment