பட்டங்களோடு இணைக்கப்பட்ட நூலாய்
எனக்குத் தெரிந்தவர்களும் நெருங்கியவர்களும்என்னுடன் எண்களால் இணைக்கப்பட்டுள்ளார்கள்
நூலறுந்த பட்டமாய்
அவர்கள் புறப்பட்ட பிறகு
எண் இணைப்பு அவசியமின்றி
அவர்களின் எண்களை நீக்கிவிடுகிறேன்
கடந்த ஆண்டு ஸ்ரீரெங்கன், வாசுதேவன், சந்திரசேகரன்
இந்த ண்டு மாதவன், கிருஷ்ணசாமி, ரஹீம், சான் லாய்
இப்படி ஒவ்வொரு பெயரின் எண்கள்
மறைந்துகொண்டிருக்கின்றன
இன்பாக்ஸில் அவர்களில் சிலர் எப்போதோ
அனுப்பிய குறுஞ்செய்திகள் இன்னும்
இருக்கின்றன
யார் எண்களை யார் நீக்குவது முதலில்?
அறிவிக்காத இந்தப்போட்டி கணந்தோறும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது நம்மில்
எண்களை நீக்கும் என் செயல்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்
யார் யாரோ தங்கள் கைப்பேசியில்
என் எண்களை நீக்கும்வரை
No comments:
Post a Comment