யாருமற்ற அறையில்
நான் படித்து முடிக்காத புத்தகத்தின்திறந்து கிடக்கும் பக்கங்களில்
நிறைந்து வழியும் எழுத்துகளில்
எப்போதோ இறந்துபோன மனிதன்
நடந்துபோன கடற்கரையோர
காலடிச் சுவடுகள்
அவற்றின் ஈரம் மாறாமல்
அப்படியே இருக்கக் கண்டேன்
அறைக்குள் நுழைந்து
புத்தகத்தின் பக்கங்களைப்
படபடக்கச் செய்து
தன் இருப்பை எனக்கு அறிவித்து
என் உடலையும் தீண்டி
வெளியேறுகிறது காற்று
ஒரு கள்வனைப்போல்
எந்த அடையாளமும் வைக்காமல்
வீட்டைத் தூய்மையாகத் துடைத்துவிட்டு
கதவின் வழி வெட்கமின்றி
வெளியேறுகிறோம் நம்மில் பலரும்
No comments:
Post a Comment