நம் குரல்

Monday, February 15, 2010

ஹைக்கூ நதிக்கரை (1)



சோம்பல் மாணவன்
அழைத்துக் காட்டினேன்
பாறை இடுக்கில் செடி

வாடகை வீடு மாறும் நாளில்
நான் நட்ட செடியில்
சில பூக்கள்

பூக்களைப் பறிக்காதீர்கள்
செடியிலேயே இருக்கட்டும்
பசியோடு தும்பி

உணவைக் கொஞ்சம்
சிந்தி உண்ணுங்கள்
எறும்புகள் வரும் நேரம்

குப்பைக் கொட்ட வந்தவள்
தலை குனிந்தாள்
நதியில் தெரிந்தது முகம்

கோயில் உண்டியல்
ஏக்கத்தோடு பார்க்கும்
ஏழைச் சிறுமி

ஒழுகும் தமிழ்ப்பள்ளி
சுவரில் நனையும்
இரட்டைக் கோபுரம்

பெய்யத் தொடங்கியது மழை
நல்ல வேளை
குடை இல்லை

அகதி முகாமில்
பிறந்தநாள் சிறுவனுக்கு
விளையாட்டுத் துப்பாக்கி

செம்மண் சாலையில் தமிழன்
அண்ணாந்து வெறித்தான்
மலேசியக் கொடி

(இன்னும் நனைக்கும்..)

1 comment:

  1. குப்பைக் கொட்ட வந்தவள்
    தலை குனிந்தாள்
    நதியில் தெரிந்தது முகம்

    -
    மிகவும் சிறப்பு.

    ரசிக்கவும் முடிகிறது.

    குப்பைப் கொட்ட வந்தவள் ஏன் தலை குனிகிறாள் என்று எண்ணிப் பார்த்தால் ஹைக்கூவின் சிறப்பு தெளிவாகும்.

    ஒரு சமயம் அவள் வேளைக்காரியாக இருக்கலாம். வீட்டை சுத்தம் செய்து சேர்த்த குப்பைகளைத் தெருவில் உள்ள தொட்டியில் கொட்ட வரும்போது அவளை விரும்புியவன் வந்துவிட்டானோ? அல்லது தெரிந்தவர் யாராவது வந்துவிட்டாரோ?

    அல்லது பள்ளியில் - கல்லூரியில் படிக்கும் அவள் குப்பைக் கொட்டுவதை அவர்கள் நண்பர்கள் பார்த்துவிட்டார்களோ என்று அச்சம் எனக்குத் தோன்ற...

    இவ்வாறு மேலும் சில சிந்தனைகள் செல்ல செல்ல... மூன்றாம் அடியைப் படித்து வியந்துதான் பொனேன்.

    அட.. அவள் முகம் நதியில் தெரிகிறது.

    இப்போதுதான் தன்னைத்தானே ரசிக்கிறாள் போல...

    அவள் ரசிப்பதைப் போலவே நானும் தங்கள் ஹைக்கூவை ரசித்தேன்.

    நன்றி.

    ReplyDelete